மேனி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மேனி1மேனி2மேனி3

மேனி1

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (மனித) உடல்; உடம்பு.

  ‘அவன் மேனி லேசாக நடுங்கியது’
  ‘பொன்போல் சிவந்த மேனி’

மேனி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மேனி1மேனி2மேனி3

மேனி2

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (தானியங்களை மதிப்பிடும்) முகத்தலளவையில் சுமார் 28 கிலோ கொண்ட ஓர் அளவு; கலம்.

  ‘குறுவையில் உங்களுக்கு எத்தனை மேனி கண்டுமுதல் ஆயிற்று?’
  ‘இந்த முறை இருபது மேனி விளைச்சல் காணும் என்று நினைக்கிறேன்’

மேனி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மேனி1மேனி2மேனி3

மேனி3

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு வீதம்.

  ‘ஆளுக்கு நூறு ரூபாய் மேனி கூலி பேசினார்’