தமிழ் மேம்பாடு யின் அர்த்தம்

மேம்பாடு

பெயர்ச்சொல்

 • 1

  (இருக்கும் நிலையைவிட) உயர்வான நிலை.

  ‘மனித குல மேம்பாட்டுக்கு மட்டுமே அணுசக்தியைப் பயன்படுத்த வேண்டும்’
  ‘கிராமப்புற மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காகப் பாடுபடுவோம்’

 • 2

  (மேலும் பயன்பாடு கருதிச் செய்யப்படும்) சீரமைப்பு; சீர்திருத்தம்.

  ‘முக்கிய நகரங்களின் சாலை மேம்பாட்டிற்கான திட்டம் பரிசீலனையில் உள்ளது’