தமிழ் மேற்கோள் யின் அர்த்தம்

மேற்கோள்

பெயர்ச்சொல்

 • 1

  ஒருவர் தன் பேச்சிலோ எழுத்திலோ பொருத்தம் கருதி மற்றவருடைய கவிதை, கட்டுரை போன்றவற்றிலிருந்து மாற்றம் செய்யாமல் அப்படியே எடுத்துக்காட்டும் ஒரு சிறு பகுதி.

  ‘அவருடைய பேச்சில் பல இடங்களில் நவீனக் கவிஞர்களின் வரிகள் மேற்கோள்களாக வந்தன’
  ‘லத்தீன் அமெரிக்க இலக்கியங்களிலிருந்து மேற்கோள்களைக் காட்டாமல் அவர் எந்தக் கட்டுரையுமே எழுதுவதில்லை’

 • 2

  குறிப்பிட்ட ஒன்றை அல்லது ஒருவரை ஒரு தகவலுக்கு ஆதாரமாகச் சுட்டிக்காட்டும் செயல்.

  ‘தீவிரவாதியிடமிருந்து நிறைய வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டதாகக் காவல்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டிச் செய்திகள் வெளியாகியுள்ளன’