தமிழ் மேலிடம் யின் அர்த்தம்

மேலிடம்

பெயர்ச்சொல்

  • 1

    (கட்சி, நிறுவனம் முதலியவற்றில்) செயல்பாடுகளை நிர்ணயிக்கும் தலைமைப் பொறுப்புக் கொண்ட உயர்மட்ட அமைப்பு அல்லது குழு.

    ‘வேட்பாளர்களைக் கட்சியின் மேலிடம் விரைவில் அறிவிக்கும்’
    ‘இந்தப் பிரச்சினை தொடர்பாக மேலிடம் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படத் தயாராக இருப்பதாகத் தொழிலாளர்கள் கூறினர்’