தமிழ் மேலோட்டமாக யின் அர்த்தம்

மேலோட்டமாக

வினையடை

 • 1

  (கண்ணோட்டம், ரசனை, படிப்பு, விமர்சனம், செயல்கள் முதலியவற்றைக் குறித்து வரும்போது) ஆழமாகவும் விரிவாகவும் இல்லாமல்.

  ‘எந்தக் கற்பனையும் இல்லாமல் மேலோட்டமாகவே பாடுகிறார்’
  ‘பட்டறைக்கு வந்த முதலாளி எல்லாவற்றையும் மேலோட்டமாகப் பார்த்துவிட்டுச் சென்றார்’
  ‘இந்த ஊழல் வழக்கைப் பற்றி எனக்கு மேலோட்டமாகத்தான் தெரியும்’

 • 2

  வெளிப்பார்வைக்கு மட்டும் தோன்றும் விதமாக.

  ‘இவை புராண நாடகங்கள்போல மேலோட்டமாகத் தோன்றினாலும் உண்மையிலேயே இவை சுதந்திரப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டவையாகும்’