தமிழ் மேலோட்டமான யின் அர்த்தம்

மேலோட்டமான

பெயரடை

 • 1

  (கண்ணோட்டம், ரசனை, படிப்பு, விமர்சனம், செயல்கள் முதலியவற்றைக் குறித்து வரும்போது) ஆழமாகவும் விரிவாகவும் இல்லாத.

  ‘‘இன்றைய திரைப்படங்களும் பத்திரிகைகளும் மேலோட்டமான ரசனையையே வளர்த்தெடுக்கின்றன’ என்றார் அவர்’
  ‘நாட்டின் பிரச்சினைகளைப் பற்றிய மேலோட்டமான பார்வையை இந்தக் கட்டுரை கொண்டிருக்கிறது’

 • 2

  வெளிப்பார்வைக்கு மட்டும் தோன்றும் விதமான.

  ‘இது மேலோட்டமான விசாரணையைப் போல்தான் தோன்றுகிறது’
  ‘இரு கட்சிகளுக்கு இடையிலும் இருக்கும் வேறுபாடு மேலோட்டமானதுதான்’