தமிழ் யானை யின் அர்த்தம்

யானை

பெயர்ச்சொல்

 • 1

  துதிக்கையும் முறம் போன்ற காதுகளும் மிகப் பெரிய உடலும் கொண்ட விலங்கு.

  ‘கோயில் யானை’
  ‘யானைகள் கூட்டமாக ஆற்றில் இறங்கிக்கொண்டிருந்தன’
  ‘பொதுவாக ஆண் யானைகளுக்குத்தான் தந்தம் இருக்கும்’

 • 2

  (சதுரங்க ஆட்டத்தில்) கோட்டை.