தமிழ் யாளி யின் அர்த்தம்

யாளி

பெயர்ச்சொல்

  • 1

    (புராணங்களில் கூறப்படுவதும் கோயில்களில் சிற்பமாகச் செதுக்கப்பட்டிருப்பதுமான) சிங்க முகமும் யானையின் துதிக்கையும் தந்தமும் கொண்ட விசித்திர மிருகம்.

    ‘மேலே யாளியும் கீழே சிறு சிற்பங்களும் செதுக்கப்பட்ட தூண்கள் அந்தக் கோயில் மண்டபத்தில் வரிசையாக இருந்தன’
    ‘வீணையின் முகப்பில் யாளி முகம் செதுக்கப்பட்டிருந்தது’