தமிழ் யோசி யின் அர்த்தம்

யோசி

வினைச்சொல்யோசிக்க, யோசித்து

 • 1

  (ஒன்றைக் குறித்து) சிந்தித்தல்.

  ‘எந்தக் கல்லூரியில் சேர்வது என்று நீயே யோசித்து ஒரு முடிவுக்கு வா’
  ‘ஊருக்குப் போவதா, வேண்டாமா என்று தீவிரமாக யோசித்துக்கொண்டிருக்கிறான்’

 • 2

  (ஒன்றைக் குறித்து) ஆலோசித்தல்.

  ‘இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ள பிரச்சினைகளை அரசு யோசித்து முடிவெடுக்கும்’
  ‘புது நிறுவனங்களை வாங்குவது பற்றி நாங்கள் யோசித்துக்கொண்டிருக்கிறோம்’

 • 3

  (மறுப்பு, எதிர்ப்பு அல்லது எதிர்பாராத விளைவு போன்றவற்றைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் ஒன்றைச் செய்வதற்கு) தயங்குதல்.

  ‘அம்மா என்ன சொல்வாளோ என்று யோசிக்கிறேன்’
  ‘‘பெற்ற பிள்ளை பணம் கேட்டால் கொடுப்பதற்கு யோசிக்கிறார்’ என்று தன் அப்பாவைப் பற்றிக் குறைகூறிக்கொண்டிருந்தான்’