ராசி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ராசி1ராசி2

ராசி1

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

சோதிடம்
 • 1

  சோதிடம்
  ஒருவர் பிறக்கும் நேரத்தில் ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடம்.

  ‘மகர ராசி’
  ‘ரிஷப ராசி’
  ‘மீன ராசி’
  ‘என் ஜாதக ராசி, நான் கஷ்டப்பட வேண்டும் என்று இருந்தால் யார் என்ன செய்ய முடியும்?’
  ‘அவருடைய ஜாதக ராசி, இடம்பெயர்ந்துகொண்டே இருப்பார்’

 • 2

  சோதிடம்
  பூமியைச் சுற்றியுள்ள 360ᵒ கொண்ட நட்சத்திர மண்டலத்தின் பன்னிரண்டு பிரிவுகளில் ஒன்று.

 • 3

  சோதிடம்
  நன்மையான விளைவைத் தரும் தன்மை; அதிர்ஷ்டம்.

  ‘நீ வந்த ராசிதான் எனக்குப் பதவி உயர்வு கிடைத்திருக்கிறது’
  ‘இது எனக்கு ரொம்ப ராசியான வீடு’
  ‘படத்தின் இறுதிக் கட்டத்தை ரயில் நிலையத்தில் முடிப்பது தமிழ்ப் படங்களைப் பொறுத்தவரை ராசியாக அமைந்துவிட்டது’

ராசி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ராசி1ராசி2

ராசி2

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (மனஸ்தாபம், சண்டை முதலியவற்றினால் பிரிந்தவர் இடையே ஏற்படும்) சமரசம்.

  ‘சண்டையிட்டுக்கொண்ட இருவரும் ராசியாகப் போய்விட்டார்கள்’