தமிழ் ரிக்ஷா யின் அர்த்தம்

ரிக்ஷா

பெயர்ச்சொல்

 • 1

  (இயந்திர விசையால் அல்லது மிதிப்பதால் நகரும்) இரண்டு பேர் அமர்ந்து செல்லக்கூடிய மூன்று சக்கர வாகனம்.

  ‘வாடகை ரிக்ஷா’
  ‘ரிக்ஷாக்காரர்களுக்கு வங்கியின் மூலம் கடன் உதவி’

 • 2

  ஒருவரை உட்காரவைத்து இழுத்துச் செல்லும் இரு சக்கர வாகனம்.

  ‘மேற்கு வங்காளத்தில் அண்மைக் காலம்வரை ரிக்ஷா புழக்கத்தில் இருந்தது’