ருசி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ருசி1ருசி2

ருசி1

வினைச்சொல்ருசிக்க, ருசித்து

 • 1

  சுவைத்தல்; சுவைத்து அனுபவித்தல்.

  ‘காப்பியை ருசித்துக் குடித்தான்’

 • 2

  (ஒருவருக்குக் குறிப்பிட்ட உணவுப்பொருள், தின்பண்டம் போன்றவை) சுவையுடையதாக இருத்தல்.

  ‘என் வாய்க்கு எதுவும் ருசிக்கவில்லை’

ருசி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ருசி1ருசி2

ருசி2

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  சுவை.

  ‘சாப்பாட்டில் ருசியே இல்லை என்று அலுத்துக்கொண்டார்’
  ‘வாய்க்கு ருசியாக ஏதாவது கிடைக்காதா என்று அலைகிறான்’

 • 2

  சுவாரஸ்யம்.

  ‘தன் வாழ்க்கையில் நடந்த ருசியான நிகழ்ச்சிகளை விவரித்துக்கொண்டிருந்தார்’
  ‘படப்பிடிப்பின்போது நடந்த ருசிகரமான சம்பவம் ஒன்று என் நினைவுக்கு வருகிறது’