தமிழ் வக்கணை யின் அர்த்தம்

வக்கணை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  பேச்சு வழக்கு (சமைத்த உணவு) விரும்பி உண்ணும் வகையில் சுவையாக இருப்பது.

  ‘வாய்க்கு வக்கணையாகச் சமைத்துப் போட்டால் சாப்பிட ஓடிவருவான்’

 • 2

  பேச்சு வழக்கு (பேச்சில்) சாமர்த்தியம்.

  ‘படித்த பெண், அதுதான் வக்கணையாகப் பேசுகிறாள்’
  ‘அவன் வக்கணையாகப் பேசுவான். ஆனால் எந்தக் காரியத்தையும் ஒழுங்காகச் செய்யமாட்டான்’

 • 3

  வட்டார வழக்கு கேலி; ஏளனம்.

  ‘கழுத்தை முன்னே நீட்டி வக்கணை செய்தாள்’
  ‘மருமகளை வக்கணை பேசுவதே அவள் வழக்கமாகிவிட்டது’