தமிழ் வகைசெய் யின் அர்த்தம்

வகைசெய்

வினைச்சொல்-செய்ய, -செய்து

  • 1

    (உரிய) ஏற்பாடு செய்தல்; (ஒன்றுக்கான) முறைமைகளை உருவாக்குதல்.

    ‘வெள்ள நிவாரண உதவி உரியோருக்குப் போய்ச்சேர அரசு வகைசெய்ய வேண்டும்’
    ‘வன்முறையில் ஈடுபடுவோரை விசாரணை இல்லாமல் சிறையில் அடைக்க இந்தச் சட்டம் வகைசெய்கிறது’
    ‘தவறு செய்யும் நகர சபைத் தலைவரைப் பதவிநீக்கம் செய்வதற்கு இந்தச் சட்டத்தில் வகைசெய்யப்பட்டுள்ளது’