தமிழ் வகையறா யின் அர்த்தம்

வகையறா

பெயர்ச்சொல்

 • 1

  (குறிப்பிடப்படுவதோடு) தொடர்புடைய மற்றவை.

  ‘வயலின், தம்பூரா வகையறாக்களுடன் வித்வான் வந்து இறங்கினார்’

 • 2

  குறிப்பிட்ட சாதி, சாதியின் உட்பிரிவு அல்லது குறிப்பிட்ட குடும்பப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

  ‘கோயில் திருவிழாவில் தங்கள் வகையறாவை ஒதுக்கிவைத்துவிட்டதாக அவர்கள் சண்டைக்கு வந்தார்கள்’
  ‘ஒரே வகையறாவில் திருமண உறவை வைத்துக்கொள்ள மாட்டார்கள்’