தமிழ் வசதி யின் அர்த்தம்

வசதி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  செல்வமும் பொருளும் ஏற்படுத்தித் தரும் சுகம் நிறைந்த நிலை.

  ‘வசதியற்ற குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு முன்னேறியவர்’
  ‘வசதியாக இருக்கும்போதே உன் பெண்களைக் கட்டிக்கொடுத்துவிடு!’
  ‘என் சித்தப்பா நல்ல வசதியான குடும்பத்தில்தான் பெண்ணெடுத்திருக்கிறார்’

 • 2

  சிரமம், இடைஞ்சல் போன்றவை இல்லாமல் ஏற்றதாக அமையும் நிலை அல்லது சூழல்.

  ‘பேருந்து நிலையத்துக்கு அருகே வீடு இருந்தால் கொஞ்சம் வசதிதான்’
  ‘வசதியாக அலுவலகத்திற்குப் பக்கத்திலேயே ஓட்டல் இருக்கிறது’
  ‘அலுவலக நேரத்தை அவரவர் வசதிக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்ளக் கூடாது’
  ‘வெளிச்சம் வருவதற்கு வசதியாக ஜன்னலை திறந்துவைத்தார்’

 • 3

  ஒரு தேவையை நிறைவேற்றுவதற்கான பொருள் அல்லது சேவை.

  ‘இந்த ஊரில் தங்குவதற்குச் சரியான வசதி கிடையாது’
  ‘சாலை வசதிகூட இல்லாத கிராமங்கள் இன்னமும் எத்தனையோ இருக்கின்றன’
  ‘இந்தப் பகுதியினருக்குச் சிறந்த முறையில் குடிநீர் வசதிகள் செய்துதரப்படும் என்று மந்திரி வாக்குறுதி அளித்தார்’