தமிழ் வட்டம் யின் அர்த்தம்

வட்டம்

பெயர்ச்சொல்

 • 1

  மையப் புள்ளியிலிருந்து எல்லாப் பக்கங்களிலும் சம தூரத்தில் வளைவான கோட்டினால் அமைந்த (பந்து போன்ற) வடிவம்.

  ‘வட்டமான மேஜை’
  ‘எல்லோரும் வட்டமாக அமருங்கள்’
  ‘இந்த வட்டத்தின் ஆரம் 5 செ.மீ. என்றால் அதன் சுற்றளவு என்ன?’

 • 2

  குழுவாக இருக்கும் அமைப்பு; தொடர்புடையவர்கள்.

  ‘அவனது குறும்பு எங்கள் நண்பர்கள் வட்டத்தில் மிகவும் பிரபலமானது’
  ‘அரசியல் வட்டம்’
  ‘சினிமா வட்டம்’

தமிழ் வட்டம் யின் அர்த்தம்

வட்டம்

பெயர்ச்சொல்

 • 1

  அரசின் வருவாய் நிர்வாக அமைப்பில் பிர்க்காவைவிடப் பெரிய நிர்வாகப் பிரிவு; தாலுகா.

  ‘கோயமுத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம்’

 • 2

  நகரசபை போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தலுக்காகப் பிரிக்கப்படும் சிறு பிரிவு.

  ‘155ஆவது வட்டத்துக்கு மறு தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது’