தமிழ் வட்டி யின் அர்த்தம்

வட்டி

பெயர்ச்சொல்

  • 1

    (குறிப்பிட்ட காலத்திற்கு இவ்வளவு என்கிற விகிதத்தில்) கடன் தொகைக்குக் கூடுதலாக செலுத்த வேண்டிய அல்லது வங்கி போன்றவற்றில் முதலீடு செய்த பணத்துக்குக் கூடுதலாகப் பெறும் தொகை.

    ‘வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் விவசாயிகள் வாங்கிய கடனுக்கான வட்டி முழுவதுமாக ரத்துசெய்யப்படும் என்று பிரதமர் அறிவித்தார்’