தமிழ் வடிவம் யின் அர்த்தம்

வடிவம்

பெயர்ச்சொல்

 • 1

  புற உருவ அமைப்பு; புறத் தோற்றம்.

  ‘செவ்வக வடிவ மரக் கட்டை’
  ‘சதுர வடிவ அறை’
  ‘மாத்திரை வடிவத்திலும் இந்த மருந்து கிடைக்கிறது’
  ‘நீரைக் கிழித்துச் செல்லுவதற்கு ஏற்ற வடிவம் கொண்ட விசைப் படகு’

 • 2

  (கலை, இலக்கியங்களில்) ஒரு படைப்பு உருவாக்கப்படும் விதம், உத்தி, அமைப்பு முதலியன; உருவம்.

  ‘இந்த அனுபவத்தைக் கதை வடிவத்தில் சொல்வது கடினம்’
  ‘சமுதாயத்தில் புதுக் கருத்துகள் ஏற்கப்படும்போது கலை வடிவங்களும் மாறுகின்றன’