தமிழ் வடிவமை யின் அர்த்தம்

வடிவமை

வினைச்சொல்-அமைக்க, -அமைத்து

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (சிலை, கட்டடம் போன்றவற்றுக்குக் குறிப்பிட்ட) வடிவம் கிடைக்கும்படி செய்தல்; உருவாக்குதல்.

  ‘இந்த உழைப்பாளர் சிலையை வடிவமைத்த சிற்பிக்குப் பாராட்டு’
  ‘இந்தத் திரையரங்கத்தை வடிவமைத்தவர் வெளிநாட்டவரா?’
  ‘இவை அனைத்தும் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட ஆடைகள்’
  ‘இது கிராமச் சாலைகளில் செல்வதற்காகவே வடிவமைக்கப்பட்ட வண்டி’