தமிழ் வண்டி ஓடு யின் அர்த்தம்

வண்டி ஓடு

வினைச்சொல்ஓட, ஓடி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (அன்றாட அடிப்படை வசதிகளுக்குக் குறைவு இல்லாமல் உடல்நலத்தோடு) வாழ்க்கை நடத்தல்.

    ‘இன்னும் கொஞ்சம் நாள் வண்டி ஓடினால் போதும். பிறகு என் பையன் பார்த்துக்கொள்வான்’
    ‘‘எப்படி இருக்கிறீர்கள்?’ என்று கேட்டதற்கு ‘ஏதோ வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது’ என்றார் நண்பர்’
    ‘எத்தனை காலத்துக்கு இப்படியே வண்டி ஓடும்? எனக்கும் எண்பது வயது ஆகிறது அல்லவா?’