தமிழ் வதம் யின் அர்த்தம்

வதம்

பெயர்ச்சொல்

 • 1

  (புராணங்களில்) (இறைவன் தீயவர்களை) அழிக்கும் செயல்.

  ‘இராவணன் வதம்’
  ‘கீசக வதம்’

தமிழ் வீதம் யின் அர்த்தம்

வீதம்

பெயர்ச்சொல்

 • 1

  விகிதம்.

  ‘அகலத்தை எந்த வீதத்தில் அதிகப்படுத்துகிறோமோ அதே வீதத்தில் நீளத்தையும் அதிகப்படுத்த வேண்டும்’
  ‘நவீன மருத்துவத்தின் காரணமாக இறப்பு வீதம் குறைந்துவருகிறது’
  ‘தனிவட்டி வீதம்’
  ‘கூட்டுவட்டி வீதம்’
  ‘ஒரு வேளைக்கு இரண்டு தேக்கரண்டி வீதம் இந்த மருந்தைக் குடித்து வரவும்’
  ‘ஒளி விநாடிக்கு 1,86,000 கிலோ மீட்டர் வீதம் பயணம் செய்கிறது’
  ‘ஒவ்வொரு பத்திரிகையிலும் ஐம்பது பிரதிகள் வீதம் கடைக்கு வாங்குவார்’
  ‘ஒவ்வொருவருக்கும் ஐம்பது ரூபாய் வீதம் நூறு பேருக்கு வழங்கினார்’
  ‘ஒரு நாளைக்கு இரண்டு மாத்திரை வீதம் சாப்பிட்டுவருமாறு மருத்துவர் கூறினார்’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு சதவீதம்.

  ‘மொத்த ஜனத்தொகையில் எண்பது வீதம் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர்’