தமிழ் வன்மை யின் அர்த்தம்

வன்மை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  மிகவும் தீவிரம்.

  ‘அவர்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை வன்மையாக மறுத்தார்’
  ‘புதிய சட்டத் திருத்தத்திற்கு வன்மையான எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது’
  ‘திட்டமிட்டுச் செய்த கொலை என்பதால் குற்றவாளியை வன்மையாகத் தண்டிக்கும்படி அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிபதியைக் கோரினார்’

 • 2

  (பேச்சு, எழுத்து முதலியவற்றின்) ஆற்றல்.

  ‘நா வன்மை’
  ‘எழுத்து வன்மை’
  ‘சொல் வன்மை’