தமிழ் வயது யின் அர்த்தம்

வயது

பெயர்ச்சொல்

 • 1

  பிறந்ததிலிருந்து அல்லது தோன்றியதிலிருந்து கணக்கிடப்படும் கால அளவு.

  ‘இருபத்தைந்து வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும் என்று விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது’
  ‘சின்ன வயதில் நான் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறேன்’
  ‘இந்த வயதிலும் எப்படி ஓடியாடி வேலை பார்க்கிறார்!’
  ‘இந்த ஆமையின் வயது 125’
  ‘மரங்களின் வயதைக் கண்டுபிடிக்க விஞ்ஞான வழிமுறைகள் உள்ளன’

 • 2

  (ஒருவர் ஒன்றைச் செய்ய) சட்டம் அல்லது சமூகம் அங்கீகரித்துள்ள கால நிறைவு.

  ‘கல்யாண வயதில் எனக்கு இரண்டு பெண்கள் இருக்கிறார்கள்’
  ‘உனக்கு ஓட்டுப் போடும் வயது வந்துவிட்டதா?’