தமிழ் வயல் யின் அர்த்தம்

வயல்

பெயர்ச்சொல்

  • 1

    (பொதுவாக) பயிரிடப்படும் நிலம்; (குறிப்பாக) நெல் பயிரிடும் நிலம்; கழனி.

    ‘வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சிவிட்டு வருகிறார்’
    ‘வயலில் அறுவடை நடந்துகொண்டிருக்கிறது’
    ‘மழை இல்லாததால் வயல்கள் காய்ந்துகிடக்கின்றன’