தமிழ் வயிற்றிலடி யின் அர்த்தம்

வயிற்றிலடி

வினைச்சொல்-அடிக்க, -அடித்து

  • 1

    (ஒருவரின்) பிழைப்பைக் கெடுத்தல்.

    ‘ஏழைகளின் வயிற்றிலடிக்காதீர்கள்’
    ‘கூலித் தொழிலாளிகளின் வயிற்றிலடித்துக் கோடீஸ்வரன் ஆகப்போகிறீர்களா?’
    ‘உப்பு வரி ஏழைகளின் வயிற்றிலடிப்பதால் அதை நீக்க வேண்டும் என்று காந்தி கேட்டுக்கொண்டார்’