தமிழ் வயிற்றைக் கலக்கு யின் அர்த்தம்

வயிற்றைக் கலக்கு

வினைச்சொல்கலக்க, கலக்கி

  • 1

    பெரும் பீதியை ஏற்படுத்துதல்.

    ‘அந்த அதிகாரியின் மீசையும் முகமுமே வயிற்றைக் கலக்கும்’
    ‘என் தங்கையின் திருமணத்துக்கு இரண்டு லட்ச ரூபாய் பணம் திரட்ட வேண்டுமே என்பதை நினைத்தாலே வயிற்றைக் கலக்குகிறது’