தமிழ் வரத்து யின் அர்த்தம்

வரத்து

பெயர்ச்சொல்

  • 1

    (வியாபாரச் சரக்கு) வந்துசேர்தல்; (அணை, ஏரி முதலியவற்றுக்கு நீர்) வருதல்.

    ‘இரண்டு நாட்களாக மணிலாப் பயறு வரத்து அதிகரித்துள்ளது’
    ‘மழையின் காரணமாக ஏரிகளில் கணிசமான நீர் வரத்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’