தமிழ் வரன் யின் அர்த்தம்

வரன்

பெயர்ச்சொல்

 • 1

  ஒருவர் திருமணம் செய்துகொள்வதற்காகப் பார்க்கும் ஆண் அல்லது பெண்.

  ‘சீக்கிரம் பெண்ணுக்கு ஒரு நல்ல வரனாகப் பார்த்துக் கல்யாணம் செய்ய வேண்டும்’
  ‘என் பையனுக்கு ஒரு நல்ல வரன் அமைந்திருக்கிறது’

தமிழ் வீரன் யின் அர்த்தம்

வீரன்

பெயர்ச்சொல்

 • 1

  (அரசின்) படையில் பணிபுரிபவன்.

  ‘விமானப்படை வீரர்களின் அணிவகுப்பைப் பிரதமர் பார்வையிட்டார்’

 • 2

  வீரம் மிகுந்தவன்.

  ‘அந்த வீரன் நாட்டிற்காகத் தன் உயிரையே கொடுத்தான்’