வரிசை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வரிசை1வரிசை2

வரிசை1

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  ஒருவருக்குப் பின் ஒருவராக அல்லது ஒன்றையடுத்து ஒன்றாக அமையும் ஒழுங்கு அல்லது முறை.

  ‘பிரார்த்தனை முடிந்ததும் மாணவர்கள் வரிசையாக நடந்து வகுப்புக்குச் சென்றார்கள்’
  ‘சாலை நெடுக வரிசைவரிசையாக மரங்கள்’
  ‘முக்கிய வீரர்கள் வரிசையாக ஆட்டமிழந்ததால் இந்திய அணி 153 ஒட்டங்களுக்கு ஆட்டமிழந்தது’
  ‘முத்துப் போன்ற பல் வரிசை’
  ‘அவர் தனது அலமாரியில் புத்தக வரிசையைக் குலையாமல் வைத்துக்கொள்வார்’
  ‘பாதுகாப்பு அமைச்சரின் மேல் அவர் வரிசையாகக் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்’
  ‘வரிசையான வீடுகள்’

 • 2

  புத்தகம், திரைப்படம் போன்றவை குறிப்பிட்ட தலைப்பு, கதை அமைப்பு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு தொடர்ச்சியாக வெளியிடப்படும் முறை.

  ‘சாகித்திய அகாதெமி வெளியிட்டிருக்கும் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் இது ஔவையாரைப் பற்றிய புத்தகம்’
  ‘குழந்தைகள் புத்தக வரிசை’
  ‘புராணப் பட வரிசையில் சமீபத்திய வரவு இது’

 • 3

  குறிப்பிட்ட பண்பு, தரம் போன்றவற்றைச் சேர்ந்தவற்றின் அல்லது சேர்ந்தவர்களின் தொடர்ச்சி.

  ‘தமிழ்நாட்டில் இருந்த சித்தர்களின் வரிசையில் தன்னையும் ஒரு சித்தராகப் பாரதியார் சேர்த்துக்கொள்கிறார்’
  ‘இந்தியாவின் சிறந்த இலக்கியப் படைப்பாளிகளின் வரிசையில் ஜெயகாந்தன் மிகவும் முக்கியமானவர்’

 • 4

  (ரூபாய் நோட்டு, பரிசுச்சீட்டு முதலியவை குறித்து வருகையில்) சில குறியீடுகளோடு ஒன்றையடுத்து ஒன்றாக வரும் எண்களைக் கொண்டவற்றின் தொகுப்பு.

  ‘புதிதாகச் செலாவணிக்கு வரும் ஐந்து ரூபாய் நோட்டுகள் இரு வரிசை கொண்டவை’

 • 5

  உயிரியல்
  (உயிரின வகைப்பாட்டில்) ஒத்த குடும்பங்களை உள்ளடக்கிய, வகுப்பைவிடச் சிறிய பிரிவு.

  ‘எலி, அணில் போன்ற பிராணிகள் கொறி விலங்கு வரிசையைச் சேர்ந்தவை’
  ‘பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த விலங்குகள் எல்லாம் ஊனுண்ணி வரிசையில் அடங்கும்’
  ‘மீன்கொத்தியும் கொண்டலாத்தியும் ஒரே வரிசையைச் சேர்ந்த பறவைகள்’

வரிசை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வரிசை1வரிசை2

வரிசை2

பெயர்ச்சொல்-ஆக, -ஆன