தமிழ் வருத்தம் யின் அர்த்தம்

வருத்தம்

பெயர்ச்சொல்

 • 1

  (மனத்துக்குப் பிடிக்காத நிகழ்ச்சிகளால் அல்லது இழப்பினால் ஏற்படும்) துன்ப உணர்வு; வேதனை.

  ‘வருத்தம் தோய்ந்த முகத்துடன் உட்கார்ந்திருந்தார்’
  ‘படித்து முடித்ததும் வேலை கிடைக்கவில்லை என்று அவனுக்கு வருத்தம்’

 • 2

  (ஒருவர் மேல் மற்றவருக்கு ஏற்படும்) மனத்தாங்கல்; மனக்குறை.

  ‘கேட்டபோது பணம் தராததால் அவனுக்கு என் மேல் வருத்தம்’
  ‘நான் நிறைய உதவி செய்யவில்லை என்று என் சகோதரர்களுக்கு வருத்தம் உண்டு’

 • 3

  பிறருடைய மனம் வருந்தும் முறையில் அல்லது விரும்பத்தகாத முறையில் தான் நடந்துகொண்டதற்காக ஒருவர் மனப்பூர்வமாகத் தெரிவிக்கும் ஆதங்கம்.

  ‘உங்களிடம் அவ்வாறு பேசியதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்’

தமிழ் வருத்தம் யின் அர்த்தம்

வருத்தம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு நோய்; வியாதி.

  ‘குழந்தைக்கு என்ன வருத்தம்?’