தமிழ் வரைபடம் யின் அர்த்தம்

வரைபடம்

பெயர்ச்சொல்

 • 1

  (ஓர் இடம், நாடு, கட்டடம் போன்றவற்றின் தோற்றம், அமைப்பு முதலியவற்றை அல்லது குறிப்பிட்ட அளவு, எண்ணிக்கை போன்றவற்றைக் காட்டும்) கோடுகளால் ஆன படம்.

  ‘இந்திய வரைபடத்தில் கிழக்கு நோக்கிப் பாயும் ஆறுகளின் பெயர்களை எழுது’
  ‘வரைபடத்தில் உள்ளபடிதான் கட்டடம் கட்டப்படுகிறது’
  ‘நாட்டின் எல்லைகள் குறிக்கப்பட்ட துல்லியமான வரைபடம்’
  ‘இந்த வரைபடம் பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்களைக் குறிக்கிறது’