தமிழ் வரைமுறை யின் அர்த்தம்

வரைமுறை

பெயர்ச்சொல்

 • 1

  ஒன்றை இப்படித்தான் செய்ய வேண்டும் என்பதற்கான அல்லது ஒன்று இப்படித்தான் நிகழும் என்பதற்கான விதிமுறை, நியதி, கட்டுப்பாடு, ஒழுங்கு போன்றவை; வரையறை.

  ‘யாரிடம் என்ன பேசுவது என்ற வரைமுறையே உனக்குக் கிடையாதா?’
  ‘எதற்கும் ஒரு வரைமுறை வேண்டும்’
  ‘நிறுத்தற்குறிகள் இடுவதற்கான வரைமுறைகள் என்ன என்பது தமிழில் இன்னும் தெளிவுபடவில்லை’
  ‘மனிதன் நாடோடியாகக் காடுகளில் திரிந்துகொண்டிருந்த காலங்களில் உறவுகள் வரைமுறை செய்யப்பட்டிருக்கவில்லை’
  ‘தொழில் நிறுவனங்கள் எப்படி இயங்க வேண்டும் என்ற வரைமுறைகளை அரசுதான் வகுக்கிறது’