தமிழ் வரையறை யின் அர்த்தம்

வரையறை

பெயர்ச்சொல்

  • 1

    ஒன்றின் தன்மை, தரம், அளவு, அமைப்பு போன்றவற்றை வரையறுப்பது.

    ‘இதுதான் சிறந்த இலக்கியம் என்பதற்குத் துல்லியமான வரையறை எதுவும் இல்லை’
    ‘கால வரையறையின்றி கல்லூரி மூடப்பட்டுள்ளது’
    ‘‘சித்திரவதை’ என்ற சொல்லுக்கு ‘கொடுமையாகத் துன்புறுத்தும் செயல்’ என்று இந்த அகராதியில் பொருள் வரையறை செய்யப்பட்டுள்ளது’