தமிழ் வறுத்தெடு யின் அர்த்தம்

வறுத்தெடு

வினைச்சொல்-எடுக்க, -எடுத்து

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு தொந்தரவு செய்தல்.

  ‘‘படி, படி’ என்று ஏன் அவனை வறுத்தெடுக்கிறாய்?’

 • 2

  பேச்சு வழக்கு (வெப்பம் கடுமையாக) வருத்துதல்.

  ‘கத்தரி வெயில் வறுத்தெடுக்கிறது’

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு பேச்சு வழக்கு (ஒன்றைச் செய்யும்படி ஒருவரை) திரும்பத்திரும்ப வலியுறுத்துதல்.

  ‘நோய் வந்ததிலிருந்தே ‘அதைத் தின்னாதே, இதைத் தின்னாதே’ என்று அம்மா வறுத்தெடுக்கிறார்’