தமிழ் வளர்த்தெடு யின் அர்த்தம்

வளர்த்தெடு

வினைச்சொல்

  • 1

    (வளர்த்தெடுக்க, வளர்த்தெடுத்து) (ஒரு கலை, கருத்து, அமைப்பு முதலியவற்றை) சிறந்த அளவில் அல்லது பெரும் அளவில் வளர்ச்சி அடையச்செய்தல்.

    ‘மலினமான ரசனையை வளர்த்தெடுக்கும் சினிமாப் பத்திரிகைகள் பெருகிவிட்டன’
    ‘விடுதலைப் போராட்டத்தை வளர்த்தெடுத்ததில் தென்னிந்தியாவின் பங்கு மிக முக்கியமானது’
    ‘தெருக்கூத்தை வளர்த்தெடுக்கும் விதமாகச் சில முக்கிய நிகழ்வுகள் கடந்த இருபது வருட காலமாக நடந்துவருகின்றன’