தமிழ் வளர்ச்சி யின் அர்த்தம்

வளர்ச்சி

பெயர்ச்சொல்

 • 1

  (உயிரினங்கள், தாவரம் முதலியவை) வளர்கிற முறை; வளர்ந்து அடைகிற நிலை.

  ‘வயதுக்கு ஏற்ற வளர்ச்சி இல்லை’
  ‘முதுகெலும்புள்ள பிராணிகளின் உணவுப்பாதை நன்கு வளர்ச்சியடைந்துள்ளது’
  ‘வயதுக்கேற்ற உடல் வளர்ச்சியோடு மன வளர்ச்சியும் இருக்க வேண்டும்’

 • 2

  (ஒன்று) தன்னுடைய தற்போதைய நிலையிலிருந்து அதிகரித்து அடுத்த நிலையை அடையும் முறை; முன்னேற்றம்.

  ‘வளர்ச்சி அடைந்த நாடுகள்’
  ‘தொழில் வளர்ச்சி அடையத் தேவையான வழிமுறைகள்’
  ‘இலக்கிய வளர்ச்சி’
  ‘ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி என்பது நாட்டின் வளர்ச்சியோடு தொடர்புடையது ஆகும்’
  ‘இந்தக் கல்லூரியின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிய புரவலர்களுக்கு நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறோம்’