தமிழ் வளையம் யின் அர்த்தம்

வளையம்

பெயர்ச்சொல்

 • 1

  (உலோகம், இரப்பர் குழாய் போன்றவற்றை) வளைத்து வட்ட வடிவில் செய்யப்பட்டது.

  ‘இரும்பு வளையம்’
  ‘சாவி வளையம்’
  ‘தீப்பந்தம் வளையத்தின் உள்ளே ஒருவர் பாய்ந்து சாகசம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது’
  உரு வழக்கு ‘தீவிரவாதிகளின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து பிரதமரைச் சுற்றிப் பாதுகாப்பு வளையம் பலப்படுத்தப்பட்டுள்ளது’

 • 2

  (புகை, ஒளி போன்றவற்றின் வடிவத்தைக் குறித்து வரும்போது) வட்டம்.

  ‘சிகரெட் புகையை வளையம்வளையமாக விட்டான்’
  ‘கண்ணாடிச் சில்லில் பட்டு ஒளி வளையம் கண்களைக் கூச வைத்தது’

 • 3

  (காது, மூக்கு முதலியவற்றில் அணியும்) வட்ட வடிவ ஆபரணம்.

  ‘ஆண்கள் காதில் வளையம் போட்டுக்கொள்வது இப்போதைய நாகரிகம்’

 • 4

  கல், தூசி போன்றவற்றால் ஆனதும் கோள்கள், நட்சத்திரங்கள் போன்றவற்றைச் சுற்றி வட்டமாக இருப்பதுமான பொருள்.

  ‘வியாழன், சனி போன்ற கோள்களைச் சுற்றிக் கணக்கற்ற வளையங்கள் இருக்கின்றன’