தமிழ் வளைவு யின் அர்த்தம்

வளைவு

பெயர்ச்சொல்

 • 1

  நேராக இல்லாமல் வளைந்து அமையும் பகுதி.

  ‘கம்பியின் வளைவுகளையெல்லாம் முதலில் சரிசெய்’
  ‘அந்த மலைப் பாதையில் வளைவுகள் அதிகம்’
  ‘தெரு வளைவில் வண்டி வருவது தெரிந்தது’

 • 2

  மேற்புறத்தில் வில் போன்று வளைந்திருக்கும்படி கட்டப்படும் அல்லது ஏற்படுத்தப்படும் அமைப்பு.

  ‘குடியிருப்பின் ஆரம்பத்தில் பெரிய வளைவு இருக்கும் என்று அடையாளம் சொன்னார்’
  ‘அமைச்சரின் வருகையை முன்னிட்டுச் சாலை நெடுக அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டன’