தமிழ் வழித்தோன்றல் யின் அர்த்தம்

வழித்தோன்றல்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு ஒரு குலத்தில் அல்லது வம்சத்தில் தோன்றியவர்.

  ‘பாபரின் வழித்தோன்றல்கள் வெகுகாலம் இந்தியாவை ஆண்டார்கள்’
  ‘முற்காலத்தில் அரசர்கள் இறைவனின் வழித்தோன்றல்களாகக் கருதப்பட்டனர்’

 • 2

  உயர் வழக்கு ஒரு குறிப்பிட்ட மரபு, போக்கு போன்றவற்றின் தொடர்ச்சியாகக் கருதப்படுபவர்.

  ‘தாயுமானவரைச் சித்தர் மரபின் வழித்தோன்றல் என்று சிலர் கருதுகிறார்கள்’