தமிழ் வழுவழுப்பு யின் அர்த்தம்

வழுவழுப்பு

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  (ஒரு பரப்பு, பொருள் போன்றவை) உராய்வு இல்லாமல் வழுக்குவதாக அமையும் தன்மை.

  ‘ஆற்றங்கரையில் கிடந்த வழுவழுப்பான கற்களைப் பொறுக்கிக்கொண்டிருந்தான்’
  ‘வழுவழுப்புத் தாளில் பத்திரிகையின் அட்டைப் படம்’

 • 2

  பளபளப்பு.

  ‘எண்ணெய் பூசப்பட்டது போன்ற வழுவழுப்புடன் உடல் மின்னியது’