தமிழ் வாசல் யின் அர்த்தம்

வாசல்

பெயர்ச்சொல்

 • 1

  (வீடு, கட்டடம் போன்றவற்றில் அல்லது ஒரு அறையில்) நுழையும் வழி.

  ‘வாசலை மறைத்துக்கொண்டு நின்றால் வீட்டின் உள்ளே எப்படிப் போவது?’
  ‘வாசல் நிலையில் உட்கார்ந்து என் தங்கை பத்திரிகை படித்துக்கொண்டிருந்தாள்’
  ‘கோயிலின் கிழக்குக் கோபுர வாசலைத் திறந்தார்கள்’
  ‘வாசல் கதவு திறந்துகிடந்தது’
  ‘பின் வாசல் வழியே வீட்டின் உள்ளே வந்தான்’
  ‘உள் வாசலின் மேலே மாட்டியிருந்த தாத்தாவின் புகைப்படம் கீழே விழுந்து உடைந்துவிட்டது’

 • 2

  (வீடு, கட்டடம் போன்றவற்றில்) நுழையும் வழிக்கு முன் உள்ள பகுதி.

  ‘கோயில் வாசலில் நிறைய கடைகள் இருந்தன’
  ‘எங்கள் வீட்டு வாசலின் வலது பக்கம் பெரிய வேப்ப மரம் ஒன்று இருக்கும்’
  ‘வாசலில் பந்தல் போட்டிருக்கும். அதுதான் நீங்கள் கேட்ட வீடு’

 • 3

  (வீடு கட்டும்போது பொருத்தப்படும் கதவின்) நிலை; நிலைப்படி.

  ‘புது வீட்டுக்கு வாசல் வைத்தாயிற்றா?’