தமிழ் வாடகை யின் அர்த்தம்

வாடகை

பெயர்ச்சொல்

  • 1

    வேறு ஒருவருக்குச் சொந்தமான வீடு, பொருள் முதலியவற்றைக் குறிப்பிட்ட காலம்வரைதான் பயன்படுத்திக்கொள்ள குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை இவ்வளவு என்ற அளவில் பணம் தருவதாகச் செய்துகொள்ளும் ஏற்பாடு/மேற்குறிப்பிட்ட முறையில் பயன்படுத்துவதற்காகக் குறிப்பிட்ட காலத்திற்கு இவ்வளவு என்ற அளவில் கொடுக்கும் பணம்.

    ‘மாதச் சம்பளத்தில் மூவாயிரம் ரூபாய் வீட்டு வாடகைக்குப் போய்விடுகிறது’
    ‘ஒரு மணி நேரத்திற்கு மிதிவண்டி வாடகை ஐந்து ரூபாய்’
    ‘வாடகைக் கார் பிடித்து வந்தான்’