வாட்டம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : வாட்டம்1வாட்டம்2

வாட்டம்1

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (முகம்) பொலிவு இழந்த தோற்றம்.

  ‘காலையிலிருந்து உன் முகம் ஏன் வாட்டமாக இருக்கிறது?’

 • 2

  வருத்தம்.

  ‘வேலையில்லாப் பட்டதாரிகளின் வாட்டத்தைப் போக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’

வாட்டம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : வாட்டம்1வாட்டம்2

வாட்டம்2

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (ஒரு காரியத்தை எளிதாகச் செய்வதற்கு ஏற்ற வகையில் அமையும்) சரியான அல்லது வசதியான நிலை; வாகு; தோது.

  ‘சமையல் செய்வதற்கு வாட்டமாக அடுப்பு மேடை இருக்க வேண்டும்’
  ‘ஏணியை வாட்டமாக வைத்துக்கொண்டு பிறகு ஏறு’
  ‘இருந்த நிலையிலேயே எட்டி எடுப்பதற்கு வாட்டமாகப் புத்தகங்களை அடுக்கி வைத்திருந்தான்’