தமிழ் வாதம் யின் அர்த்தம்

வாதம்

பெயர்ச்சொல்

 • 1

  ஒரு கருத்தைச் சார்ந்து, தகுந்த ஆதாரங்களையும் கூற்றுக்களையும் குறிப்பிட்ட முறையில் கோர்வையாக முன்வைத்துக் கூறப்படுவது.

  ‘கிடைக்கும் நீரை எல்லோரும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற வாதம் நியாயம்தானே’
  ‘இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகுதான் தீர்ப்புக் கூறுவேன்’
  ‘எதிர்க்கட்சி வழக்கறிஞரின் வாதத்தை ஏற்றுக்கொண்டு நீதிபதி குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்தார்’
  ‘அவன் எடுத்ததற்கெல்லாம் வாதம் செய்வான்’

 • 2

  நிலைப்பாடு.

  ‘பிற்போக்கு வாதம்’
  ‘பழமை வாதம்’
  ‘பகுத்தறிவு வாதம்’

 • 3

  அருகிவரும் வழக்கு விவாதம்.

  ‘அம்மாவிடம் வாதம் செய்யாமல் சாப்பிடு’
  ‘அவருடைய கட்டுரை பத்திரிகையில் வந்ததை அடுத்துச் சுவையான வாதங்கள் எழுந்தன’

தமிழ் வாதம் யின் அர்த்தம்

வாதம்

பெயர்ச்சொல்

 • 1

  சுவாசம், இரத்த ஓட்டம் ஆகியவற்றைச் செயல்படவைக்கும், உடலில் இயங்கும் மூன்று சக்திகளில் ஒன்று.