வாதி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வாதி1வாதி2வாதி3

வாதி1

வினைச்சொல்வாதிக்க, வாதித்து

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு வாதாடுதல்; தர்க்கம்செய்தல்.

  ‘எல்லோரும் கூடி வாதித்தும் பயன் இல்லை’
  ‘கடவுளை அடைவதற்கு மதம் ஒரு தடையாக இருக்க முடியாது என்று வாதித்தார்’
  ‘எவ்வளவோ வாதித்துப் பார்த்தும் கார் வாங்க அப்பா ஒப்புக்கொள்ளவில்லை’
  ‘எந்தத் தொழில் செய்தாலும் அரசிடம் உரிமம் பெற வேண்டும் என்று சட்டம் வாதிக்கிறது’

வாதி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வாதி1வாதி2வாதி3

வாதி2

வினைச்சொல்வாதிக்க, வாதித்து

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு துன்புறுத்துதல்; வருத்துதல்.

  ‘செய்த பாவம் அவனை வாதிக்காமல் போகுமா?’

வாதி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வாதி1வாதி2வாதி3

வாதி3

பெயர்ச்சொல்

 • 1

  (உரிமையியல் நீதிமன்றத்தில்) தனது உரிமையை உறுதிசெய்யக் கோரி வழக்குத் தொடுப்பவர்.

  ‘வாதியும் பிரதிவாதியும் ஒத்துப்போவதாக வாக்குறுதி அளித்ததால் வழக்கு வாபஸ் பெறப்பட்டது’