தமிழ் வாய் யின் அர்த்தம்

வாய்

வினைச்சொல்வாய்க்க, வாய்த்து, வாய்ந்த, வாய்ந்தது போன்ற வடிவங்கள் மட்டும்

 • 1

  (குறிப்பிட்ட ஒன்று அல்லது ஒருவர்) கிடைத்தல்; வந்துசேர்தல்; அமைதல்.

  ‘இப்படி ஒரு நல்ல நண்பன் வாய்த்தது நான் செய்த அதிர்ஷ்டம் என்று நினைக்கிறேன்’
  ‘தனக்கு ஒரு தங்கமான மருமகள் வாய்த்ததை எண்ணி மகிழ்ந்தாள்’
  ‘அவரைப் பார்ப்பதற்கு இதுவரை சந்தர்ப்பம் வாய்க்கவில்லை’
  ‘எனக்கு வாய்த்தது இந்த வாழ்க்கைதான்!’

தமிழ் வாய் யின் அர்த்தம்

வாய்

வினைச்சொல்வாய்க்க, வாய்த்து, வாய்ந்த, வாய்ந்தது போன்ற வடிவங்கள் மட்டும்

 • 1

  (தன்னிடம்) உடையதாக இருத்தல்.

  ‘அனுபவம் வாய்ந்த மருத்துவர்’
  ‘திறமை வாய்ந்த நடிகர்’
  ‘இந்த மருந்து மிகுந்த சக்தி வாய்ந்தது’

தமிழ் வாய் யின் அர்த்தம்

வாய்

பெயர்ச்சொல்

 • 1

  (மனிதன் அல்லது விலங்கு, பறவை, பூச்சி போன்றவை) உண்பதற்கும், (மனிதன்) பேசுவதற்குமான உறுப்பு.

 • 2

  (அதிகம் அல்லது துடுக்குத்தனம் என்று நினைக்கும்படியான) பேச்சு.

  ‘ஆனாலும் உனக்கு இந்த வாய் ஆகாது’
  ‘சின்ன வயசிலேயே என்ன வாய் உனக்கு!’

 • 3

  (உட்கொள்ளுதல் குறித்து வரும்போது) ஒரு தடவையில் வாய் கொள்ளும் உணவின் அளவு.

  ‘சாதத்தைப் பிசைந்து இரண்டு வாய்தான் சாப்பிட்டிருப்பேன்; அதற்குள் யாரோ கதவைத் தட்டினார்கள்’

 • 4

  (குடுவை, ஜாடி, பாத்திரம் அல்லது பை, கோணி முதலியவற்றின்) உள்ளே இடுவதற்கான திறந்த பகுதி; திறப்பு.

  ‘பானையின் வாயை மறக்காமல் தட்டை வைத்து மூடு’
  ‘நெல்லைக் கொட்டி கோணியின் வாயை இழுத்துத் தைத்தான்’

 • 5

  (வாய் தவிர்த்த பிற உடல் உறுப்புகளைக் குறித்து வரும்போது) (உறுப்பின்) தொடக்கமாக அல்லது முடிவாக அமையும் பகுதி.

  ‘அழற்சியின் காரணமாகக் கருப்பையின் வாயில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு’
  ‘குடல் வாயின் தொடக்கத்தில் கட்டி’

 • 6

  (எரிமலையில்) குழம்பு வெளிப்படும் மேல் பகுதி.

  ‘அந்த எரிமலை வாயின் சுற்றளவு சுமார் 400 மீட்டர்’