தமிழ் வாய்க்குவாய் யின் அர்த்தம்

வாய்க்குவாய்

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசும்போது) பலமுறை; அடிக்கடி.

    ‘அவள் தன் பிள்ளையின் திறமையை வாய்க்குவாய் சொல்லி மகிழ்வாள்’
    ‘அவள் வாய்க்குவாய் ‘அண்ணா’ என்று என்னைக் கூப்பிடுவதே அழகாக இருக்கும்’