தமிழ் வாயடி யின் அர்த்தம்

வாயடி

வினைச்சொல்வாயடிக்க, வாயடித்து

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (செயலில் காட்டாமல்) வாயளவில் பேசுதல்.

  ‘சிலர் பெரிய திட்டங்கள் தீட்டுவதாக வாயடிப்பார்கள். காரியத்தில் ஒன்றும் இருக்காது’

 • 2

  பேச்சு வழக்கு வம்பு பேசுதல் அல்லது துடுக்குத்தனமாகப் பேசுதல்.

  ‘பெரியவர்களிடம் மரியாதை இல்லாமல் வாயடிக்காதே என்று அவனுக்குப் புத்திமதி கூறினார்’
  ‘ஆற்றங்கரையில் உட்கார்ந்து ஆண்கள், பெண்கள் எல்லாரும் வாயடித்துக்கொண்டிருந்தார்கள்’