தமிழ் வாயை வளர் யின் அர்த்தம்

வாயை வளர்

வினைச்சொல்வளர்க்க, வளர்த்து

  • 1

    (பெரும்பாலும் வயதில் சிறியவர்களை அடக்கும் விதமாகக் கூறும்போது) துடுக்குத்தனமாகப் பேசக் கற்றுக்கொள்ளுதல்.

    ‘உன் பெண் நன்றாக வாயை வளர்த்துவைத்திருக்கிறாள்’
    ‘வெட்டிப் பயல்களோடு சேர்ந்து உன் மகன் வாயை வளர்த்துக்கொண்டிருக்கிறான்’